En Piriyamae - என் பிரியமே

En Piriyamae - என் பிரியமே



உலகத்தின் பின்னே ஏன் செல்லுகிறாய்,
மாயையில் சிக்கி ஏன் தவிக்கிறாய்
கண்ணீர் வடித்து ஏன் கலங்குகிறாய்
என் பிரியமே

அன்புக்காக ஏன் ஏங்குகிறாய்
இதயம் உடைந்து ஏன் புலம்புகிறாய்
காயப்பட்டு ஏன் கதறுகிறாய்
என் பிள்ளையே, என் பிரியமே

உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிடமாட்டேன்
உள்ளம் கையில் உன்னை வரைந்துள்ளேன் - 2

1. தாகம் தாகம் என்று சொன்னேன்
சிலுவையில்தானே ஏன்கி நின்றேன்
உந்தன் பாரம் நான் சுமந்தேன்
என் பிள்ளையே, என் பிரியமே

உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிடமாட்டேன்
உள்ளம் கையில் உன்னை வரைந்துள்ளேன் - 2

2. நான் உன்னை நேசிக்கிறேன்
உன்னை நேசிக்கிறேன் உண்மையாய்,
நான் உன்னை நேசிக்கிறேன்
உன்னை நேசிக்கிறேன் மிக அதிகமாய் - 2

உன்னை என்றும் கைவிடமாட்டேன்
உன்னை விட்டு விலகிடமாட்டேன்
உள்ளம் கையில் உன்னை வரைந்துள்ளேன் - 2


Songs Description: Tamil Christian Song Lyrics, En Piriyamae, என் பிரியமே.
KeyWords: Zac Robert, Valentine's Day Special En Piriyamae, En Piriyame, Yen Piriyamae.

Please Pray For Our Nation For More.
I Will Pray