Velichamum Magizhchiyum - வெளிச்சமும் மகிழ்ச்சியும்

Velichamum Magizhchiyum - வெளிச்சமும் மகிழ்ச்சியும்



Scale: Bmi - 4/4 Karnatic T-90

வெளிச்சமும் மகிழ்ச்சியும்
களிப்பும் கனமும்
சபையினில் உண்டாயிருக்கும்
புகழ்ச்சியும் துதியும்
புகழும் பெருமையும்
உமக்கே என்றும் இருக்கும் - தேவா
உமக்கே என்றும் இருக்கும்

1. என் இருளை ஒளியாக மாற்றுபவரே
என் பாதைக்கு தீபமானவரே
ஒருவரும் சேரா ஒளியில் வாழ்பவரே
ஒளியின் இராஜ்யத்தில் என்னை சேர்த்திடுமே
என்னை ஒளிமயமாக்கிடுமே 

2. நித்திய மகிழ்ச்சி என்றென்றும்
எனக்கு தருபவரே
சஞ்சலம் மாற்றி சந்தோஷம் அளிப்பவரே
நிறைந்த மகிமையில் வாசம் செய்பவரே
உறைந்த பனியிலும் வெண்மையானவரே
என்னை மகிழ்ந்திட செய்திடுமே

3. உமதன்பில் மகிழ்வோடு
இருக்க செய்பவரே
எங்கெங்கும் வெற்றி சிறந்தவரே
யெகோவா நிசியாய் வெற்றியை தருபவரே
எப்போதும் வெற்றியின் வேந்தனாய் இருப்பவரே
என்னை களிப்புற செய்திடுமே


Song Description: Velichamum Magizhchiyum, வெளிச்சமும் மகிழ்ச்சியும்.
Keywords: Rev. TC Nathan, Velichamum Mahilchiyum, Namakkal A.G.

Uploaded By: NMKLAG.

Please Pray For Our Nation For More.
I Will Pray