பதினாயிரங்களில் நீர் சிறந்தவரே
பரிபூரணமான அழகுள்ளவரே
உம்மை காண கண்களும் போதாது
உம்மை பாட உதடுகள் பத்தாது
உம்மை புகழ்ந்திட வார்த்தைகள் கிடையாது
நீர் இல்லாமல் வாழ்வேது
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை
1. சாரோனின் ரோஜாவும் நீர்தானய்யா
பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமும் நீர்தானய்யா
நாற்றமடித்த எந்தன் வாழ்வில்
வாசனையாய் வந்தவரே
வாசம் வீசும் மலராக
மனம் வீச செய்தவரே
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை
2. மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானய்யா
வெள்ளைபோள பூச்செண்டும் நீர்தானய்யா
நேசமில்லை எந்தன் வாழ்வில்
நேசத்தை தந்தவரே
பாசத்தை சிலுவை மரத்தில்
சிந்திட்ட தெய்வமே
ஆராதனை ஆராதனை
என் நேசருக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
என் இயேசுவுக்கே ஆராதனை
Tanglish
[keywords] Pathinaayirangalil - பதினாயிரங்களில், Peter Parker, John Paul, Patheenaayirangalil, Tamil Christian Song.
