Magathuvamullavare - மகத்துவமுள்ளவரே






 

மகத்துவமுள்ளவரே மகிமையின் ராஜாவே
அதிசயங்கள் செய்பவரே நீர் ஒருவரே தேவன்
நான் கடந்த பாதையெல்லாம் ஒருமுறை பார்க்கிறேன்
நீர் என்னை நடத்தியதை நினைத்து துதிக்கிறேன்

என் பலவீன நேரத்திலெல்லாம் உம்மை நோக்கிப் பார்த்தேன்
என் பலன் நீரே என்று கிருபையால் உணர்த்தினீர்
நான் நின்ற இடத்தில் எல்லாம் நீர் என்னை உயர்த்தினீர்
அற்பமாய் நினைத்த என்னை நீர் அரியணையில் ஏற்றினீர்

நான் தவறி விழுந்த நேரத்தில் உம் தயவால் தூக்கினீர்
நான் ஓடி ஒழிந்த இடத்தில் இளைப்பாறுதலானீர்
சத்துருவின் கண்களின் முன்னே உம் மகிமைக்காய் நிறுத்தினீர்
சிங்கத்தின் மத்தியில் என்னை சிதையாமல் காத்தீர்
 

Tanglish

[keywords] Magathuvamullavare - மகத்துவமுள்ளவரே, Job Daniel, Asborn Sam, Magathuvam Ullavare, Magathuvamullavarae, Tamil Christian Song.