Paripoorana Aanandham - பரிபூரண ஆனந்தம்




 

பரிபூரண ஆனந்தம்
அப்பா உம் சமூகத்திலே
இதயத்தில் இளைப்பாறுதல்
ராஜா உம் சமூகத்திலே

1. தாயின் மடியில் தவழ்ந்துறங்கும்
குழந்தையைப்போல இளைப்பாறுவேன்
சாய்ந்து கொண்டேன் சாய்ந்துகொண்டேன்
தகப்பனே உம் தோளில் சாய்ந்துகொண்டேன்

2. விடியலுக்காய் விழிப்புடனே
காத்திருக்கும்  காவலன்போல்
ஏங்குகின்றேன் ஏங்குகின்றேன்
உமக்காத்தான் நான் ஏங்குகின்றேன்

3. தேவையெல்லாம் நீர்தானையா
தேடுவதும் உம்மைத்தானையா
இயேசையா இயேசையா
என் இதயமெல்லாம் நீர்தானையா

பயப்பட வேண்டாம்
கலங்கிட வேண்டாம்
உன் துணை நான் என்றீர்
உயிரோடு இருக்கும்
நாட்களெல்லாம்
உன்னோடு இருப்பேன் என்றீர்!

அளவில்லாத உந்தன் அன்பை
அப்பா என் மேல் பொழிந்தீர்
நிலையில்லாத இந்த வாழ்வில்
நிம்மதி எனக்குத் தந்தீர்
 

Paripoorana Aanandham
Appa Um Samoohathile
Idhayathil Ilaippaardhuthal
Raaja Um Samoohathile

1. Thaayin Madiyil Thavazhnthurangum
Kuzhandhaiyappola Ilaippaarduven
Saayndhu Konden Saayndhukonden
Thagappane Um Tholil Saayndhukonden

2. Vidiyalukkaai Vizhippudaney
Kaaththirukkum Kaavalanpol
Enggugindren Enggugindren
Umakkaaththaan Naan Enggugindren

3. Thevaiyellam Neerthaanaiyaa
Theduvadhum Ummaithaanaiyaa
Yesuvayaa Yesuvayaa
En Idhayamellam Neerthaanaiyaa

Bayappadha Vendaam
Kalangkida Vendaam
Un Thunai Naan Endreer
Uyirodu Irukkum
Naadkalellam
Unnodu Iruppeen Endreer!

Alavillaadha Undhan Anbai
Appa En Mael Pozhindheer
Nilaiyilladha Intha Vaazhvile
Nimmadhi Enakkuth Thandheer

[keywords] Paripoorana Aanandham - பரிபூரண ஆனந்தம், Reegan Gomez, Paripoorana Aanantham, Pareepoorana Aanandham, Tamil Christian Song.