அன்பு நிறைந்தவர் என் உள்ளம் அறிந்தவர்
என் வாழ்க்கை பாதையில் என்னோடு வருபவர்
ஆதி முதல் தெய்வமே ஆபிரகாமின் தேவனே
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
இறுதிவரையிலும் என்னை சுமப்பவர்
1. அன்னாளின் கண்ணீரைக் கண்டதினாலே
ஆகாரின் அழுகுரலை கேட்டதினாலே
கண்ணீரை துருத்தியிலே வைத்ததினாலே
கனிவுடனே கருவை தந்து ஆசீர்வதித்தீர்
தள்ளாமல் தயவினாலே பெருகச் செய்தீர்
2. பார்வையில்லா மனிதன் சத்தம் கேட்டதினாலே
நிமிர முடியா வேதனையை அறிந்ததினாலே
கண்ணீரால் பாதங்களை நனைத்ததினாலே
சுகம் கொடுத்து பெலன் கொடுத்து மீட்பை கொடுத்தீர்
புத்தம் புது வாழ்வு வாழ ஜீவன் கொடுத்தீர்
3. உடைந்து போன என் மனதை அறிந்ததினாலே
யாருமில்லா வெறுமை வாழ்வை புரிந்ததினாலே
இரவெல்லாம் கண்ணீரால் ஜெபித்ததினாலே - நான்
தனிமையிலே உம்மை நோக்கி ஜெபித்ததினாலே
உண்மை அன்பு எதுவென்று விளங்க செய்தீரே
உன்னதரே உம்மில் என்னை மகிழச்செய்தீரே
Anbu Niraindhavar En Ullam Arindhavar
En Vaazhkai Paadhaigal Ennodu Varubavar
Aadhi Mudhal Deivame Aabiragaamin Deivane
Ennai Azaiththavar Unmaiyullaavar
Iruththivaraiyilum Ennai Sumappavar
1. Annaalin Kanneerai Kandathinaale
Aagaarin Azhuguralai Kaetthathinaale
Kanneerai Thuruththiyile Vaiththathinaale
Kanivudaney Karuvai Thandhu Aaseervadhithir
Thallamal Thayavinale Perugach Seidhir
2. Paarvaiyillaa Manithan Saththam Kaetthathinaale
Nimira Mudiyadha Vedhanaiyai Arindhathinaale
Kanneeral Paadhangalai Nannaiththathinaale
Sukam Koduthu Pelan Koduthu Meedpai Koduthir
Puththam Puthu Vaazhvu Vaazha Jeevan Koduthir
3. Udaindhu Pona En Manathai Arindhathinaale
Yaarumillaa Verumai Vaazhvai Purindhathinaale
Iravellam Kanneeral Jebiththathinaale - Naan
Thanimaiyile Ummai Nokki Jebiththathinaale
Unmai Anbu Edhuvendra Vilangha Seidhire
Unnadhare Ummil Ennai Magizhach Seidhire
[keywords] Anbu Niraindhavar - அன்பு நிறைந்தவர், Enoch Kaviraj, Thimotheyu Kalai, Anbu Nirainthavar, Anbhu Niraindhavar, Tamil Christian Song.
