Neer Varume - நீர் வாருமே

Neer Varume - நீர் வாருமே





 

உம் பிரசன்னத்தால் என்னை நிரப்புமே
உம் மகிமையால் என்னை மூடிடுமே-2
அழகே என் உயிரே
அணைக்கும் ஆதரவே
அன்பின் இயேசுவே நீர் வாருமே-2

உம் தயவால் என்னை தாங்குமே
உம் கரத்தால் என்னை நடத்துமே-2

பரலோக காற்றாக
உன்னத பெலனாக
அக்கினி நாவாக
என்மேல் வாருமே-2
நீர் என்னில் நான் உம்மில் 
ஒன்றாக மாறுவேன்
நீர் என்னில் நான் உம்மில் 
பிரியாமல் வாழுவேன்-2
- உம் தயவால்

வற்றாத ஊற்றாக
ஜீவ நதியாக
சத்திய ஆவியே
நீர் என்னுள் வாருமே-2
என் பெலனே என் துணையே
என்னை தேற்றும் தெய்வமே 
என் ஜெபமே என் ஜெயமே
என் முத்திரையும் நீரே-2

ஆவியே நீர் வாருமே
மகிமையே நீர் போதுமே-2

மகிமையின் மேகமாக
வழி காட்டும் தீபமாக
பரலோக பாதையில்
என்னை கொண்டு செல்லுமே-2
நான் செல்வேன் நான் சேர்வேன்
பரலோக தேசத்தை
நான் செல்வேன் நான் சேர்வேன்
இயேசுவின் பாதத்தை-2

மணவாளன் அவரோடு
மகிழ்வேனே நித்தியமாய்-2

அழகே என் உயிரே
அணைக்கும் ஆதரவே
அன்பின் இயேசுவே நீர் வாருமே-2
உம் தயவால் என்னை தாங்குமே
உம் கரத்தால் என்னை நடத்துமே-2
 

Um Prasannaththaal Ennai Nirappume
Um Magimaiyaal Ennai Moodidume-2
Azhagae En Uyirae
Anaikkum Aadharavae
Anbin Yesuvae Neer Vaarume-2

Um Thayavaal Ennai Thaangume
Um Karaththaal Ennai Nadathume-2

Paraloka Kaatraaga
Unnatha Belanaaga
Akkininaavaaga
Enmael Vaarume-2
Neer Ennil Naan Ummil
Ondraaga Maaruven
Neer Ennil Naan Ummil
Priyaamaal Vaaluven-2
-Um Thayavaal

Vatraadha Oottraaga
Jeeva Nathiyaaga
Saththiya Aaviyae
Neer Ennul Vaarume-2
En Belanae En Thunaiyae
Ennai Thaettrum Dheivamae
En Jepamae En Jeyamae
En Muththiriyum Neerae-2

Aaviyae Neer Vaarume
Magimayea Neer Pothume-2

Magimaiyin Megamaaga
Vazhi Kaattum Theepamaaga
Paraloka Paathaiyil
Ennai Kondu Sellume-2
Naan Selvaen Naan Saervaen
Paraloka Thaesaththai
Naan Selvaen Naan Servaen
Yesuvin Paathaththai-2

Manavaalan Avarodu
Magizhvaenae Niththiyamaai-2

Azhagae En Uyirae
Anaikkum Aadharavae
Anbin Yesuvae Neer Vaarume-2
Um Thayavaal Ennai Thaangume
Um Karaththaal Ennai Nadathume-2


[keywords] Neer Varume - நீர் வாருமே, Vaarum Ayya 2, Um Prassannathaal Ennai, Um Prasannaththaal Ennai Nirappume.