Samuthiramo Thimingalamo - சமுத்திரமோ திமிங்கலமோ
மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும்
எந்தன் மூச்சாக என்னோடு இருப்பார்
எந்தன் தூரத்தை சென்றடைவேன்
சமுத்திரமோ திமிங்கலமோ
என்னை சேதப்படுத்தாதே
சமுத்திரமோ திமிங்கலமோ
அவர் என்னை காத்திடுவார்
1. ஆழத்தில் என்னை தள்ளினாலும்
அலைகள் என்மீது புரண்டாலும் - 2
கடலின் ஆழத்திலும் என்னோடு இருந்து
எந்தன் ஜீவனை இரட்சிப்பாரே - 2
- சமுத்திரமோ
2. எதிராக பலர் எழுந்தாலும்
எந்தன் குரலை ஓங்க செய்வார் - 2
தேவ ராஜ்யத்தில் நான் இருப்பதினால்
தினம் அற்புதங்கள் காண்பேன் - 2
- சமுத்திரமோ
Song Description: Tamil Christian Song Lyrics, Samuthiramo, சமுத்திரமோ.
KeyWords: New Tamil Christian Song Lyrics, Bro. Vijay Aaron, pls, Power Lines - 6, Samuthiramo Thimingalamo.