Neer Sonnal - நீர் சொன்னால்

Neer Sonnal - நீர் சொன்னால்



நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தால் உள்ளம் வாடும்

உந்தன் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும்

பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன் நான் - 2

பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை அணைத்தவரே
பரியாசமும் பசி தாகமும்
உம்மை விட்டு என்னை பிரிக்காதே - 2
                                               - பெலவீனன்

மெய் தேவா உம் அன்பை காட்டவே
சொந்த ஜீவனை தந்தீரய்யா - 2
உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
முத்தமிட்டு இளைப்பாறுவேன் - 2
                                               - பெலவீனன்

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன் - 4


Songs Description: Tamil Christian Song Lyrics, Neer Sonnal, நீர் சொன்னால்.
KeyWords: Mohan Chinnasamy, John Jebaraj, Neer Sonnaal, Neer Sonnal Ellaam Agum.


Please Pray For Our Nation For More.
I Will Pray