Intha Mangalam - இந்த மங்களம்



இந்த மங்களம் செழிக்கவே
– கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில்
சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல்
இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை
எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய்
– பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத
போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன்
நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன்
– அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன்
– நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா
ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து
தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே
– அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு
முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி
நித்திய சுப சோபனமாய்


Songs Description: Tamil Christian Song Lyrics, Intha Mangalam, இந்த மங்களம்.
KeyWords: Tamil Christian Marriage Songs, Wedding Songs, Indha Mangalam, Intha Mangalam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.