Bayanthu Kartharin - பயந்து கர்த்தரின்



பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் - 2
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் - 2
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே - 2
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் - 2
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை


Songs Description: Tamil Christian Song Lyrics, Bayanthu Kartharin, பயந்து கர்த்தரின்.
KeyWords: Tamil Christian Marriage Songs, Wedding Songs, Bayanthu Kartharin, Payanthu Kartharin.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.