Aabiragamai Aasirvathitha - ஆபிரகாமை ஆசீர்வதித்த
ஆபிரகாமை ஆசீர்வதித்த
ஆண்டவா அருளுமே
1. செல்வி மணமகள் ------------- ம்
செல்வன் மணமகன்------------- ம் - ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!
2. கண்ணின் மணிபோல் கணவனும்
இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…
என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்
இணைந்து வாழவே (2)
3. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…
இன்பமாக எந்நாளும்
அங்ஙனமென்றும் வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே இணைந்து வாழவே
Songs Description: Tamil Christian Song Lyrics, Aabiragamai Aasirvathitha, ஆபிரகாமை ஆசீர்வதித்த.
KeyWords: Tamil Christian Marriage Songs, Wedding Songs, Aabirahamai Aasirvathitha, Aabiragaamai Aasirvathitha.
KeyWords: Tamil Christian Marriage Songs, Wedding Songs, Aabirahamai Aasirvathitha, Aabiragaamai Aasirvathitha.