Aarparippom Aarparippom - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்
இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு(ட) கானானுக்குள் நுழைவோம்
இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ
1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்
2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகிப்போகுமே – இது எழுப்புதலின்
3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை
அழித்திடுவோமே! – இது எழுப்புதலின்
Songs Description: Tamil Christian Song Lyrics, Aarparippom Aarparippom, ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்.
KeyWords: T.G Sekar, Appa Madiyiley, Arparippom Arparippom, Aarparipom Aarparipom.
KeyWords: T.G Sekar, Appa Madiyiley, Arparippom Arparippom, Aarparipom Aarparipom.