Deva Saayal - தேவ சாயல்



தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்

1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் - தேவ சாயல்

2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் - தேவ சாயல்

3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் - தேவ சாயல்

4. ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே - தேவ சாயல்

5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் - தேவ சாயல்

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே - தேவ சாயல்

7. உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய் - தேவ சாயல்


Song Description: Tamil Christian Song Lyrics, Deva Saayal, தேவ சாயல்.
KeyWords: Deva Saayal Aaga Maari,  Sarah navaroji lyrics, saral navaroji songs lyrics, Daniel Davidson, Deva Sayal songs lyrics, Theva Sayal Aaga, Theva Saayal Aaga Maari.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.