Senaihalin Karthar Nammodirukkirar - சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்
சேனைகளின் கர்த்தர்
நம்மோடிருக்கிறார்
யாக்கோபின் தேவன் நமக்கு
உயர்ந்த அடைக்கலம்
பூமி நிலை மாறினாலும்
மலைகள் பெயர்ந்து போனாலும்
பர்வதங்கள் அதிர்ந்தாலும்
நாம் பயப்படோம்
தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா
கருத்துடனே போற்றி பாடுவோம்
யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர்
தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம்
- பூமி நிலை
தேவன் மகா உன்னதமானவர்
கெம்பீரமாக போற்றி பாடுவோம்
கர்த்தர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர்
துதித்துப் பாடி அவரை மகிமைப்படுத்துவோம்
- பூமி நிலை
கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர்
பயத்துடனே போற்றி பாடுவோம்