வானத்திலும் இந்த பூமியிலும்
உமக்கு ஒப்பான தேவன் யார்
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
உமக்கு ஒப்பான தேவன் யார்
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகராய் எவரும் இல்லை
1. நெரிந்த நாணலை முறித்திடமாட்டீர்
மங்கின திரியை அணைத்திடமாட்டீர்
உடைந்த உள்ளதை உதறிட மாட்டீர்
உலர்த்த கோலை தள்ளவும் மாட்டீர்
உருவாக்கும் தேவன் அனலாக்கும் கர்த்தர்
உலர்ந்த வாழ்வை துளிர்க்க செய்வார்
2. தளர்த்த கைகள் பெலனடைந்திடும்
தள்ளாடும் முழங்கால் உறுதிப்படும்
வறண்ட வாழ்வு செழிப்பாய் மாறிடும்
வெட்கத்தின் வேரோ அகன்றுவிடும்
வலகரத்தாலே தாங்கிடும் தெய்வம்
புயபெலத்தாலே உயர்த்திடுவார்
3. உனக்கு எதிரான ஆயுதம் வாய்க்காதே
எதிரியின் திட்டங்கள் அழித்திடுவாரே
சதிகள் எல்லாம் சிதைத்திடுவாரே
சத்துரு வெட்கத்தில் மூழ்கிடுவானே
யுத்தத்தில் வல்லவர் செயல்களில் சிறந்தவர்
உன்னத தேவன் உன் துணையே
Tanglish
[keywords] Umakku Nigaraai Evarum Illai - உமக்கு நிகராய் எவரும் இல்லை, Blessed Prince, Vaanathilum Intha, Tamil Christian Song.
