Neer Maathram Podhumae - நீர் மாத்ரம் போதுமே




 

என் தேவனே என் பிரியனே
உந்தன் அன்பை எண்ணி நான் மகிழ்வேன்
என் உயிரே என் சுவாசமே
நீரில்லாமல் நான் ஒன்றுமில்லையே

நீர் மாத்ரம் போதுமே 
நீர் மாத்ரம் போதுமே ஏசுவே 

1. என் கண்களினாலே உம்மை துக்கப்படுத்தினேன்
என் வார்த்தைகளாலே உம்மை காயப்படுத்தினேன்
உலக சிந்தையால் உந்தன் அன்பை மறந்தேன்
நான் தகுதியில்லா அன்பை நாடினேன்
சிலுவை அன்பே உண்மை ஆனது

2. என் வாழ்க்கை முடிந்ததென்று அழுது கதறினேன்
நான் உம்மை வெறுத்தேன், என் தவறை மறந்தேன்
உந்தன் சித்தத்தை நான் உதறித் தள்ளினேன்
ஓ... வெட்கம் அடைந்து தனிமையாய் நின்றேன்
ஓடி வந்து அணைத்துக் கொண்டீரே
 

Tanglish

[keywords] Neer Maathram Podhumae - நீர் மாத்ரம் போதுமே, Prasanna, En Devanae, Tamil Christian Song.