எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு
என் போர் அதில் துணை நிற்பது யாரு - 2
படைத்தவர் வலி அதை உணர்வாரோ
நான் அலைந்திடும் வழி காண்பாரோ
சுமந்திடும் பழி அகற்றுவாரோ
பாவியின் மறுமொழி ஏற்பாரோ
தூக்கி சுமக்கின்றார் பல நேரம் உணர்கின்றேன்
பறக்க சொல்கின்றார் அதினால் தான் திகைக்கிறேன் - 2
அலைக்கழிப்பெல்லாம் அது வீணோ
ஆத்துமா கற்றது நன்மைக்கு தானோ
இருதய மாற்றம் இப்போ ஏனோ - அதில்
வாசம் செய்யும் நீர் கேட்டீரோ - 2
இவர் யாரோ யாவற்றிலும் கூட வருகிறார்
என் நேசர் அதினாலே விலகாது இருக்கிறார்
என் கண்ணீர் என் புலம்பல் எல்லாம் கேட்கிறார்
நினைவில் வைத்து பூரணமாய் பதில் தருகிறார்
தூக்கி சுமக்கின்றார் பல நேரம் உணர்கின்றேன்
பறக்க சொல்கின்றார் அதினால் தான் திகைக்கிறேன் - 2
எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு
என் போர் அதில் துணை நிற்பவர் யாரு
எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு
என் போர் அதில் துணை நிற்பவர் இயேசு
படைத்தவர் வலி அதை உணர்வீரே
சிலுவையின் நிழல் அதில் கண்டேனே
சுமந்திடும் பழி அதை ஏற்றீரே
இந்த எத்தனின் மனதினை வென்றீரே
தூக்கி சுமக்கின்றீர் பல நேரம் உணர்கின்றேன்
சிறகும் தருகின்றீர் அதினால் தான் பறக்கின்றேன்
தூக்கி சுமக்கின்றீர் பல நேரம் மகிழ்கின்றேன்
சிறகும் தருகின்றீர் அழகாய் நான் பறக்கின்றேன்
Tanglish
[keywords] Agathiyin Vaazhvu - அகதியின் வாழ்வு, Jackson Daniel, Agathiyin Vaalvu, Ennaal Varai, Tamil Christian Song.
