நிலையில்லா உலகத்தில்
அலைந்தேன் ஐயா
நினைத்தென்னை அழைத்தீரே
எனது இயேசையா
மறந்தும்மை மறுதலித்து அடங்காமலே
மனம் போன வழிகளில் நடந்தேன் ஐயா
மடிந்தீடும் என்னைக் கண்டு
விரைந்தென் அருகில் வந்து
மனதுருகினீரே ஐயா ( என்மேல் )
சிறந்த உம் முகம் காண விரைந்தாசித்தேன்
சிலுவையின் தரிசனம் அளித்தீரையா
இனிய உம் சத்தம் கேட்டேன்
கொடிய என் குணம் வெறுத்தேன்
இனிமேல் என் துணை நீரையா ( பூவில்)
எனது மரணமோ உன் வருகையினாலோ
எது முன்பு என்னை வந்து அழைத்திடுமோ
கடைசி முடிவு நாளில்
மறவாதீர் என்னை நாதா
கனிவாய் வேண்டுகிறேன் ஐயா
Tanglish
[keywords] Nilaiyilla Ulagathil - நிலையில்லா உலகத்தில், Peterson Paul, Nelaiyilla Ulagathil, Nilai ILla ULagathil, Tamil Christian Song.
