Mutrilum Azhagullavar - முற்றிலும் அழகுள்ளவர்




 

முற்றிலும் அழகுள்ளவர் என் நேசரே
பழுதொன்றும் இல்லாத பரிசுத்தரே
பதினாயிரங்களில் சிறந்தவரே
வெண்மையும் சிவப்புமானவரே
என் நேசரே! என் நேசரே! 

பூரண ரூபவதியும் நானே
ஆத்தும நேசரின் பிரியமே
பொன்னிற சாயல் உடையவளே
பொற்பரன் இதயத்தைக் கவர்ந்தவளே 
என் நேசரே! என் நேசரே!

அருணோதயம் போன்றவளும் நானே
ஆத்தும நேசரின் மணவாளியே
உள்ளான மகிமை உடையவளே
உன்னதர் இயேசுவின் உத்தமியே
என் நேசரே! என் நேசரே

முட்களுக்குள் லீலிபுஸ்பம் நானே
பாடுகள் நடுவிலும் மலர்பவளே
நேசரின் சாயலை அணிந்தவளே
நேசத்தின் உச்சிதத்தை தருபவளே
என் நேசரே! என் நேசரே
 

Tanglish

[keywords] Mutrilum Azhagullavar - முற்றிலும் அழகுள்ளவர், David, Praiselin Stephen, Muttrilum Azhagullavar, Mutrilum Alagullavar, Tamil Christian Song.