Enna Senji - என்ன செஞ்சி




 

என்ன செஞ்சி பார்த்திட முடியும் 
உங்க முகத்தை நான்
என்ன செஞ்சி சேர்ந்திட முடியும் 
உங்க சமூகம்தான்

என் நன்மையால முடியாது 
கிரியையால முடியாது 
படிப்பால பணத்தால பதவியால முடியாது 

அந்தக் கிருபையால பக்கம் வந்தீங்க 
அந்த கிருபையால அனைத்து கொண்டீங்க 

1. கட்டுக்குள் அடங்காமல் 
நான் கண்டபடி திரிஞ்சேன்
உங்க அன்பென்னும் கட்டுக்குள்ள 
என்ன நிறுத்தி வச்ச கிருப 

குடுகுடுன்னு ஓட பார்த்தேன் 
கட கடன்னு பேசி பார்த்தேன் 
ஆனா படபடன்னு மழையைப் போல 
நனைத்தது உங்க கிருப 

நான் நன்மை காண இறங்கி 
வந்த மகாகிருப

2. ஓடி ஒளிந்து கொண்டேன் 
என்ன தேடி கண்டுபிடித்தீர்
சேற்றிலே இன்பம் கண்டேன் 
பல கேட்டிலும் சந்தோஷத்தின் 

ரத்தத்தில் மூழ்க விட்டு 
என்னை நித்தம் மீட்ட கிருப 
நாலு நாள் ஆனாலுமே 
உயிர்ப்பிக்கும் உங்க கிருப

நான் நன்மை காண இறங்கி 
வந்த மகாகிருப

அந்தக் கிருபையால பக்கம் வந்தீங்க 
அந்த கிருபையால அனைத்து கொண்டீங்க
 

Tanglish

[keywords] Enna Senji - என்ன செஞ்சி, Vijay Aaron Elangovan, Blessed Prince, Enna Senchi, Tamil Christian Song.