அல்லேலூயா அல்லேலூயா
முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிறேன்
பிந்தின ஆலயத்தின் மகிமையோ பெரியதே
கட்டப்பட்ட கட்டுகள் எல்லாம் கண்ணிதெரித்து ஓடிடுதே
ஆலயத்தின் வாசற்படிகள் களிகூற செய்திடுதே
அப்போஸ்தல அபிஷேகத்தால் அஸ்திபாரம் அசைவதில்லை
தள்ளப்பட்ட கல்லும் கூட தலைக்கல்லாய் மாறிடுதே
அஸ்திபாரங்கள் அசையாது
அசைக்கப்பார்த்த கண்கள் முன்னே
அஸ்திபாரங்கள் அசையாது
ஒ..ஒ..ஒ..
கர்த்தர் நல்லவர் இஸ்ரவேலின் வல்லவர்
கிருபை என்றுமுள்ளது அவர் கிருபை என்றும் உள்ளது
மற்றவர் தீமை எல்லாம் புகைபோல கலைந்திடுமே
விசுவாச கூட்டமெல்லாம் துதியோடு வருவாரே
கம்பீர ஆரவாரங்கள், கம்பீர ஆரவாரங்கள்
ஒய்யார நடையோடு சிங்கார உடையோடு
உம்மை ஆராதிக்க ஆலயம் வருவார்கள்
அல்லேலூயா தொனியும் வெகுதூரமாய் கேட்கும்
எங்கள் பாடல்கள் வெகுதூரமாய் கேட்கும்
எங்கள் நற்செய்தி வெகுதூரமாய் பரவும்
எங்கள் நற்சாட்சி வெகுதூரமாய் பரவும்
முந்தின மகிமை பிந்தின மகிமை
எல்லாவற்றிலும் தேவமகிமை
முன்மாரியோ பின்மாரியோ
எழும்பவேண்டுமே தேவஆலயம்
Tanglish
[keywords] Mundhina Alayam - முந்தின ஆலயம், Daniel Jawahar, Munthina Aalayam, Tamil Christian Song.
