புது வாழ்வு தந்தீரே நன்றி ஐயா
உம் வசனம் இதயத்தில் வைத்தீர் ஐயா
புது வாழ்வு தந்தீரே நன்றி ஐயா
உம் வசனம் இதயத்தில் வைத்தீர் ஐயா
தாயின் கருவில் என்னைக் கண்டீர் ஐயா
தாயினும் மேலாக அன்பு வைத்தீர்
அன்பினால் என்னை நீர் இழுத்தீர் ஐயா
ஜீவன் தந்து வாழ வைத்தீர் ஐயா
பரிசுத்த ஆவியால் நிறைத்தீர் ஐயா
இதயத்தில் உம் அன்பை ஊற்றினீரே
ஆவியின் கனிகளால் அபிஷேகித்தீர்
முத்திரை இட்டு என்னை மீட்டுக்கொண்டீர்
எனக்காக மீண்டும் நீர் வருவீர் ஐயா
என்னையும் பரலோகில் சேர்ப்பீர் ஐயா
நீதியின் வஸ்திரம் எனக்குத் தந்து
ஜீவ கிரீடத்தால் அலங்கரிப்பீர்
Tanglish
[keywords] Puthu Vazhvu - புது வாழ்வு, Godwin Ebenezar, Beulah Godwin, Puthu Vaazhvu, Pudhu Vazhvu, Tamil Christian Song.
