En Meetpar Uyirodu - என் மீட்பர் உயிரோடு




 

என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
விண்ணக ஒளியாய் முன் செல்கின்றார் -2

உயிர்த்தெழுந்தாரே
ஜெயித்தெழுந்தாரே -2

கலங்காதே திகையாதே
என்றும் கலங்காதே திகையாதே

1. மேக ஸ்தம்பம் இறங்கும் அக்கினி ஸ்தம்பம் நடத்தும்
கர்த்தர் கரம் வல்ல கரம் வழிநடத்தும் -2
எழும்பிடுவோம் நாம் ஜெயம் பெறுவோம் 
கிருபையிலே தினம் வளர்ந்திடுவோம் -2

2. உயிருள்ள தேவன் உள்ளங்கையில் வரைந்தார்
ஒரு போதும் ஒரு நாளும் கைவிட மாட்டார் -2
உயர்த்திடுவார் முடி சூட்டிடுவார்
உன்னத மகிமையால் நிறப்பிடுவார்

3. கண்மலை பிளக்கும் தண்ணீரை தந்திடும்
வனாந்திரம் செழிப்பான தோட்டமாகும் -2
பிளவுண்ட மலை உன் புகலிடமே
வரண்ட உன் வாழ்வு மலர்ந்திடுமே -2
 

Tanglish

[keywords] En Meetpar Uyirodu - என் மீட்பர் உயிரோடு, Jawahar Samuel, Daniel Jawahar, En Meetppar Uyirodu, Tamil Christian Song.