நீரே எந்தன் ஆத்தும நேசரே வாழ்விலே
போதும் மனதிலே பலவீனம் நீக்கினீர் வாழ்வுக்கு ஒளியானீரே
ஏ...ஏ... ஏக்கத்தோடே உமக்கே பாடுவேன்
ஓ...ஓ... உம் பிரசன்னத்தில் தங்குவேன்
1. ஏன் என்று விசாரிக்க எனக்கொருவரும் இல்லையே
உம்மை பார்க்காத ஒரு நிமிடம் கூட தாங்கவும் மனதில்லையே
தனிமையான வாழ்க்கைக்கு அனுக்கிரகமாய் வந்தீரே
உடைந்துப்போன உள்ளத்தை செழிப்புத் தோட்டமாக்கினீரே
இகழ்ச்சியான பேச்சுகளோ புகழ்ச்சியாக மாறியதே
நொறுங்கிப்போன என் இதயம் தொட்டு சேர்த்து கொண்டீரே
நீர் நீரே நீர்தான் எங்கள் ஆத்தும நேசர் இயேசுவே
உம்மை பாடி பாடி போற்றும்போது
ஆவியில் நானும் நிறைகின்றேன்
உம்பிள்ளைகள் நாங்கள் கேட்கும் முன்னே
கிருபையை ஊற்றுவீர்
மேசியா எங்கள் தகப்பனே
ஏ...ஏ... ஏக்கத்தோடே உமக்கே பாடுவேன்
ஓ...ஓ... உம் பிரசன்னத்தில் தங்குவேன்
2. நான் நானே கர்த்தர் என்று சொன்ன என் தெய்வமே
நீ எனக்கு பிரியமே எந்தன் ரூபவதியே
தாய் என்னை தேற்றுவது போல சுமந்துசெல்லும் தகப்பனே
தோளோடு தோள் நின்று நடத்தும் எந்தன் நண்பனே
மனம் உடைந்து இருந்தவனை மகிழ்ச்சியாக மாற்றினீரே
வெறுமையாக இருந்தவனை பயன்படுத்த அழைத்தீரே
நீர் நீரே நீர்தான் எங்கள் ஆத்தும நேசர் இயேசுவே
உம்மை பாடி பாடி போற்றும்போது
ஆவியில் நானும் நிறைகின்றேன்
உம்பிள்ளைகள் நாங்கள் கேட்கும் முன்னே
கிருபையை ஊற்றுவீர்
மேசியா எங்கள் தகப்பனே
ஏ...ஏ... ஏக்கத்தோடே உமக்கே பாடுவேன்
ஓ...ஓ... உம் பிரசன்னத்தில் தங்குவேன்
Tanglish
[keywords] Aathuma Nesare - ஆத்தும நேசரே, Daniel Jawahar, Aathuma Nesarae, Neerae Enthan, Neere Enthan, Tamil Christian Song.
