LOVE - The Ultimate Sacrifice




 

தேற்றிடும் தெய்வம் இயேசு 
தேடி வந்தாரே பாரில் 
சாபக் கோரங்கள் மாற்ற 
மரித்து மடிந்தாரே மண்ணில்

1. வஞ்சகர் சூழ்ச்சி சூழவே 
நிந்தனை ஏற்று நின்றாரே 
கஞ்சகன்  காட்டிக் கொடுத்தான் 
கர்த்தனை காசுக்காகவே

2. இருளின் நடுவே வெளிச்சமாய் 
இகழ்ந்தோர் நடுவே பொறுமையாய் 
குருதி சிந்திக் குலத்தைக் 
காக்க கொல்கொதா ஏறினாரே  

3. ஆணிகள் பாய்ந்த கைகளும் 
ஆறுதல் தந்து அணைக்குமே 
முள்முடி சூடிய மேனியால் 
முழுவினை  யாவும் தீருமே 

4. மரணத்தை வென்ற மன்னவா
வாழும் தெய்வம் இயேசுவே 
கரங்கள் நீட்டி அழைக்கின்றார் 
கவலை மறந்து ஓடிவா
 

Thetridum Deivam Yesu
Thedi Vandhaare Paaril
Saapak Koorangal Maatra
Mariththu Madindhaare Mannil

1. Vanjagar Soozhchi Soozhave
Nindhanai Etru Nindhaare
Kanjagan Kaattik Koduththaan
Karththanai Kaasukkagave

2. Irulin Naduvae Velichchamaai
Ikazhndhor Naduvae Porumaiyaai
Kuruthi Sindhik Kulaththaik
Kaakka Kolkotha Aerinaare

3. Aanikal Paayntha Kaigalum
Aarudhal Thandhu Anaikkume
Mulmudi Soodiya Meniyaal
Muzhuvinai Yaavum Theerume

4. Maranaththai Vendra Mannavaa
Vazhum Deivam Yesuve
Karangal Neetti Azaikkindraar
Kavalai Marandhu Odivaa

[keywords] LOVE - The Ultimate Sacrifice, God’s Grooverz, Shri Harini, Thetridum Deivam Yesu, Thaetidum Deivam Yesu, Tamil Christian Song.