Athisayam Avar Yesu - அதிசயம் அவர் இயேசு




 

அதிசயம் அதிசயம் இயேசுவே
பூரண அதிசயம் இயேசுவே
மாபெரும் அதிசயம் இயேசுவே
வெளிப்பட்ட அதிசயம் இயேசுவே
உலகில் உள்ள அதிசயம் மாறும்
மாறா அதிசயம் இயேசுவே

வானமும் பூமியும் அவர் புகழ் பாடிடும்
ஆலைகளும் கடல்களும் வார்த்தையால் அடங்கிடும்

1. குற்றம் இல்லா காலத்தில் ஏதேன் தோட்டத்தில்
உலாவிய அதிசயம் இயேசு
மனிதன் தவறியும் மன்னிப்பின் பாதையை
காட்டிய அதிசயம் இயேசு
மனசாட்சி காலத்தில் பாவம் பெருகையில்
பேழையில் காத்த அதிசயம் இயேசு
கிருபையின் கதவுகளைத திறந்து புதிய
ஆரம்பம் தந்த அதிசயம் இயேசு

2. மனிதன் அழுகையில் பெருமை கொண்டு
அழிந்து போகையில் மீட்டவர் இயேசு
நோவா காலத்தில் நினைவுகூர்ந்து
கிருபையின் வில்லை நின்றவர் இயேசு
யுக யுகமாய் தலைமுறையாய்
தம்மை வெளிப்படுத்தும் அதிசயம் இயேசு
காலங்கள்தோறும் தேசங்கள் அனைத்தையும்
காத்து நடத்திடும் அதிசயம் இயேசு

3. வாக்குத்தத்த காலத்தில் ஆபிரகாம் முன்
தூதனவராய் வந்தவர் இயேசு
கடல்மண் போலவும் விண்மீன்களாகவும்
இஸ்ரவேலை மாற்றின இயேசு
நியாயப் பிரமாணத்தின் காலத்தில் சீனாய்
மலையில் பிரமாணங்களைத் தந்தவர் இயேசு
தீர்க்கதரிசிகளின் நாவில் வாக்குகளை
வெளிப்படுத்தும் சத்தியம் இயேசு

4. விழுந்த மனிதகுலத்தை மீண்டும் மீட்கவே
மரணத்தை ஜெயமாக்கி எழுந்தார் இயேசு
கிருபையின் காலத்தில் சபையை நிறுவி
பரிந்து பேசும் மீட்பர் இயேசு
ஆயிரம் அரசாட்சி காலத்தில் நித்திய
ராஜாவாய் ஆட்சி செய்பவர் இயேசு
ஜாதிகள் எல்லாம் பணிந்து வணங்கிடும்
நிரந்தர அதிசயம் அவர் இயேசு
 

Athisayam Athisayam Yesuve
Purana Athisayam Yesuve
Maberum Athisayam Yesuve
Velipatta Athisayam Yesuve
Ulagil Ulla Athisayam Marum
Mara Athisayam Yesuve

Vanamum Boomiyum Avar Pugazh Paadidum
Aalaigalum Kadalgalum Vaarthaiyaal Adangidum

1. Kutram Illa Kaalathil Eden Thottathil
Ullaviya Athisayam Yesu
Manithan Thavariyum Manippin Paathaiyai
Kaatiya Athisayam Yesu
Manasaatchi Kaalathil Paavam Perugaiyil
Pelaiyil Kaatha Athisayam Yesu
Kirubaiyin Kathavugalai Thirandhu Puthiya
Arambam Thantha Athisayam Yesu

2. Manithan Azhugaiyil Perumai Kondu
Azhinthu Pogaiyil Meetavar Yesu
Nova Kaalathil Ninaivukoorndhu
Kirubaiyin Villai Nindravar Yesu
Yuga Yugamaai Thalaimuraiyai
Thamai Velipaduthum Athisayam Yesu
Kaalangal Thorum Desangal Anaithaiyum
Kaathu Nadathidum Athisayam Yesu

3. Vakkuthatha Kaalathil Abiragam Mun
Thoothanavarai Vanthavar Yesu
Kadalman Polavum Vinmeengalaagavum
Isravelai Maatrina Yesu
Niyaya Pramanathin Kaalathil Sinai
Malaiyil Pramanangalai Thanthavar Yesu
Theerkatharisigalin Navil Vaakkugalai
Velipaduthum Sathiyam Yesu

4. Viluntha Manukulathai Meendum Meetkave
Maranathai Jeyamaakki Ezhunthar Yesu
Kirubaiyin Kaalathil Sabaiyai Niruvhi
Parinthu Pesum Meetpar Yesu
Aayiram Arasatchi Kaalathil Nithya
Raajavaai Aatchi Seibavar Yesu
Jaathigal Ellaam Paninthu Vanangidum
Niranthara Athisayam Avar Yesu

[keywords] Athisayam Avar Yesu - அதிசயம் அவர் இயேசு, A Chosen Vessel Ministries, Sam Steven, Johnshny Augesthiya, Samuel Morris, Cheruba Angeline, Athisayam Athisayam Yesuve, Athisayam Athisayam Yesuvae.