நீசனாம் என்னையும் நித்தமும் நடத்திடும் கர்த்தாதி கர்த்தா
சுவாசமுள்ள யாவும் துதிக்க பாத்திரர் நீர்தானய்யா
நேற்றும் இன்றும் என்றும் மாறா எந்தன் துதி நாயகனே
உந்தன் நாமம் வாழ்கவென்று போற்றிடுவேன்
என்னை விட்டு விலகாதவர் கைவிடாதவர்
என்னை என்றும் மறவாதவர் விட்டுக் கொடுக்காதவர்
அல்லேலுயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
1. வாக்குதத்தம் செய்தவரே வாக்கு மாறாவல்லவரே
வார்த்தைகளில் உண்மையுள்ள தெய்வம் நீரே
சேற்றினின்று தூக்கினீரே சிறியவனை உயர்த்தினீரே
உந்தன் நாமம் மகிமைப்பட செய்தவரே
என் நாவு என் பகைவர்மேல் திறந்ததே
என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்ததே
2. அன்பில் பரிசுத்தவனாய் குற்றமில்லாதவனாய்
கிறிஸ்துவுக்குள் வாழ்ந்திட தெரிந்தவரே
நற்கிரியைகள் நான் செய்ய
கிறிஸ்துவுக்குள் எனை படைத்து
உந்தன் செய்கையாக என்னை வைத்தவரே
சீயோனின் மூலைக்கல்லே உம்மை நம்பிடுவேன்
சீயோனின் ராஜா நீரே
சீயோனில் ஆட்டுக்குட்டியே ஜெயம் பெற்றவரே
சீயோனின் அதிபதியே
3. சத்துருக்களின் முன்பாக நித்தம் ஒரு பந்தியை
நீர் ஆயத்தம் பண்ணினதால் வெட்கமடையேன்
என் தலையை எண்ணயினால் அபிஷேகம் பண்ணுகிறீர்
என் பாத்திரம் நிரம்பிடனீர் செய்கின்றீர்
என் ஜீவ நாட்களெல்லாம் நம்மைக்கிருபை
என்றும் என்னைத் தொடரும்
உம் வீட்டில் நீடித்த நாள் நான் நிலைத்திருப்பேன்
என்றும் உம்மோடிருப்பேன் களிகூர்ந்திடுவேன்
Neesanam Ennaiyum Niththamum Nadathidum Karthathi Kartha
Swaasamulla Yaavum Thuthikka Paaththirar Neer Thaan Ayya
Nettrum Indrum Endrum Maara Endhan Thuthi Naayagane
Undhan Naamam Vaazhga Vendru Pottriduven
Ennai Vittu Vilagaadhavar Kaividaadhavar
Ennai Endrum Maravaadhavar Vittuk Kodukkaadhavar
Alleluya Amen Alleluya
Alleluya Amen Alleluya
1. Vaakkuthatham Seidhavare Vaakku Maara Vallavare
Vaarthaigalil Unmaiyulla Deivam Neere
Saetrinindru Thookkineere Siriyavanai Uyarthineere
Undhan Naamam Magimaipada Seidhavare
En Naavu En Pagaivar Mel Thirandhadhe
En Kombu Kartharukkul Uyarnthadhe
2. Anbil Parisuththavanai Kutramillaadhavanai
Kiristhuvukkul Vaazhnthida Therindhavare
Narkiriyaigal Naan Seiyya
Kiristhuvukkul Enai Padaiththu
Undhan Seigaiyaaga Ennai Vaiththavare
Seeyonin Moolaikkalle Ummai Nambiduven
Seeyonin Raajaa Neere
Seeyonil Aattukkuttiye Jeyam Pettravare
Seeyonin Adhipadhiye
3. Saththurukkalin Munbaaga Niththam Oru Panthiyai
Neer Aayatham Panninaal Vetkamadaiyen
En Thalaiyai Ennaiyinaal Abishegam Pannugireer
En Paaththiram Nirambida Neer Seigindreer
En Jeeva Naatkalellam Nammai Kirubai
Endrum Ennai Thodarum
Um Veettil Needitha Naal Naan Nilaithiruppen
Endrum Ummodiruppen Kalikoornthiduven
[keywords] Neesanam Ennaium - நீசனாம் என்னையும், Suresh Jebaraj, Neesanam Ennaiyum, Tamil Christian Song.
