Panthaya Porul - பந்தய பொருள்





 

1. பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள ஓடிடு
பாரமான யாவையும் தள்ளிடு
தூய்மையான வாழ்வை நாடிடு
சாத்தானின் சதிகளை வென்றிடு
 
மாரநாதா அல்லேலூயா 
இயேசுராஜா வேகம் வருகிறார்

2. அந்தகார கிரியைகள் அகற்றிடு
ஒளிநிறைந்த வாழ்வு வாழ்ந்திடு
ஆவியிலே அனலாக ஜொலித்திடு
அழியாத ஜீவன் பெற்றிடு

3. புத்தியுள்ள கன்னிகைப்போல் எப்போதும்
ஆயத்தமாய் விழிப்புடனே ஜெபித்திடு
மணவாளன் இயேசு வருகின்றார்
மகிழ்வுடனே சந்திக்கப் புறப்படு

4. அழிந்து போகும் மாந்தரை நினைத்திடு
அழியாத சுவிசேஷம் சொல்லிடு
உன்னதரின் சேவை செய்ய புறப்படு
பரலோகில் பலனுண்டு மகிழ்ந்திடு
 

1. Pandhaya Porul Petrukkol La Oodidu
Baaramaana Yaavaiyum Thallidu
Thooymaiyaana Vaazhvai Naadidu
Saathaanin Sadhigalai Vendridu

Maaranaathaa Alleluyaa
Yesu Raajaa Vegam Varugiraar

2. Andhakaara Kiriyai Gal Agatridu
Oli Niraindha Vaazhvu Vaazhndhidu
Aaviyiley Analaaga Joliththidu
Azhiyaadha Jeevan Petridu

3. Buththiyulla Kannigaipol Eppodhum
Aayaththamaai Vizhippudaney Jebiththidu
Manavaalan Yesu Varugindraar
Magizhvudaney Sandhikka Purappadu

4. Azhindhu Pogum Maantharai Ninaiththidu
Azhiyaadha Suvisesham Sollidu
Unnatharin Sevai Seiya Purappadu
Paralogil Palanundu Magizhndhidu

[keywords] Panthaya Porul - பந்தய பொருள், Reegan Gomez, Panthaya Porul Pettrukolla Odidu, Tamil Christian Song.