பூரிகை ஊதிடுவோம் புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம் எக்காள தொனியோடு
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
1. எக்காளம் ஊதும்போதெல்லாம்
கர்த்தர் நம்மை நினைக்கின்றார்
எதிரியின் கையிலிருந்து
காப்பாற்றப்படுகின்றோம்
2. கிதியோன் படைகள் அன்று
பூரிகை ஊதியதால்
சிதறி கூக்குரலிட்டு
எதிரிகள் ஓடினார்கள்
3. எரிகோ மதில்கள் எல்லாம்
இடிந்து விழுகின்றன
என் தேசம் இயேசுவுக்கே
என்பது நிச்சயமே
4. சாலமோன் ஆலயத்தில்
ஏகமாய் துதிக்கும் போது
கர்த்தரின் மகிமையினால்
ஆலயம் நிரம்பியது
Poorikai Oothiduvoam Punnagai Mugaththodu
Ethiriyai Thuraththiduvoam Ekkala Thoniyodu
Muzhangiduvoam Thuthi Ekkalam
Mutrilumai Jaiyam Eduppoam
1. Ekkalam Oothum Pothu Ellam
Karththar Nammai Ninaikkindraar
Ethiriyin Kaiyilirundhu
Kaappaattrappadugindroam
2. Githiyon Padaigal Anru
Poorikai Oothiyadhaal
Sidhari Kookkuralittu
Ethirigal Oadinaargal
3. Eriko Madhilgal Ellam
Idindhu Vizhugindrana
En Thaesam Yesuvukkey
Enbadhu Nichayame
4. Saalamon Aalayaththil
Yaegamai Thuthikkum Pothu
Karththarin Magimaiyinaal
Aalayam Nirampiyadhu
[keywords] Poorikai Oothiduvom - பூரிகை ஊதிடுவோம், Father Berchmans, Poorigai Oothiduvom.