1.தள்ளுண்ட நேரங்களில்
தனிமையின் பாதைகளில்
தயவாய் என்னை தேடி வந்தீர்
துன்மார்க்கர் மத்தியினில்
தயவற்று நிற்கையினில்
துணையாய் உறவாக வந்தீர்
தகுதியே இல்லா எனக்கு
தகப்பனாய் மாறினீர்
முன்னுரிமை எனக்கு தந்து
பிள்ளையாய் மாற்றினீர்-2
என்னை அழைத்தவர், உண்மை உள்ளவர்
நீர் கைவிடாதிருப்பீர்
இம்மட்டும் வந்த நல்ல எபினேசர்
நீர் இன்னும் உதவிடுவீர்
ஒவ்வொரு நாளும் உம் கிருபையே
என் ஜீவனை காத்திடுதே
ஒவ்வொரு நாளும் உம் மறைவிலே
நான் மகிழ்ந்து வாழ்ந்திடுவேன்
2. ஆபத்து நேரத்தில்
அழுகுரல் கேட்டவரே
அரணாய் அருகில் வந்தீர்
ஆழியின் ஆழத்திலே
அலங்கோலம் கண்டவரே
அழகாய் என்னை மீட்க வந்தீர்
ஒன்றுமே இல்லா என்னை
அலங்கமாய் மாற்றினீர்
அன்போடு அழைத்து என்னை
ஆளுகை செய்கிறீர்-2
- என்னை அழைத்தவர்
என் இழப்புகள் மத்தியில்
என் தனிமையின் பாதையில்
என் ஆத்துமா உம்மை நோக்கி பாடுமே
என் நிந்தனை பெருகையில்
என் அழுகையின் பாதையில்
என் ஆத்துமா உம்மை நோக்கி பாடுமே
இனி வாழ்வது நான் அல்ல
என்னில் இயேசுவே வாழ்கிறீர்
உம் பலத்தினால்
யாவையும் மேற்கொள்வேன்
இனி துதியினால் எழும்புவேன்
என் தடைகளை தாண்டுவேன்
உம் பலத்தினால்
யாவையும் மேற்கொள்வேன்
- என்னை அழைத்தவர்
1. Thallunda Neraṅgaḷil
Thanimaiyin Paathaikalil
Thayavaai Ennai Thedi Vandheer
Thunmaarkar Maththiyinil
Thayavatru Nirkaiyinil
Thunaiyaa Uravaaga Vandheer
Thagudiye Illa Enakku
Thagappanai Maarineer
Munnurimai Enakku Thandhu
Pillaiyaa Maatrineer - 2
Ennai Azaiththavar Unmai Ullavar
Neer Kaividadhiruppeer
Immattum Vandha Nalla Ephinesar
Neer Innum Udhaviduveer
Ovvoru Naalum Um Krupaiye
En Jeevanai Kaaththidudhe
Ovvoru Naalum Um Maraivile
Naan Magizhndhu Vaalnthiduvain
2. Aabathu Neraṟil
Azhugural Kaettavare
Aranai Arugil Vandheer
Aazhin Aazhatthile
Alangkolam Kandavare
Azhagai Ennai Meedka Vandheer
Ondrumey Illa Ennai
Alangamaai Maatrineer
Anbodu Azaiththu Ennai
Aalugai Seigirir - 2
- Ennai Azaiththavar
En Izhaṟpugaḷ Maththiyil
En Thanimaiyin Paathayil
En Aaththumaa Ummay Nookki Paadume
En Nindhanai Perugaiyil
En Azhugaiyin Paathayil
En Aaththumaa Ummay Nookki Paadume
Ini Vaazhvadhu Naan Alla
Ennil Yesuvē Vaazhgirir
Um Palaththinaal
Yaavaiyum Merkolvain
Ini Thudiyinal Ezhuppuvain
En Thadaigalai Thaandhuvain
Um Palaththinaal
Yaavaiyum Merkolvain
- Ennai Azaiththavar
[keywords] Ovoru Naalum - ஒவ்வொரு நாளும், Thallunda Nerangalil, Cherie Mitchelle.