Aathumave Un - ஆத்துமாவே உன்

Aathumave Un - ஆத்துமாவே உன்



ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
கர்த்தர் செய்த உபகாரங்களை
எண்ணி எண்ணி என்றும் பாடிடு

பிள்ளையாக மாற்றினாரே
பிரியமுடன் தூக்கினாரே
இயேசுவின் இரத்தத்தால்
கழுவிவிட்டார்
இயேசுவின் இரத்தத்தால்
மீட்டுக்கொண்டார்

வியாதிகளின் பாதைகளில்
பெலவீனத்தின் நேரங்களில்
இயேசுவின் தழும்புகள் சுகம் தந்ததே
அவர் கிருபை உன்னை
தாங்கினதே தாங்கினதே

தண்ணீர்களை கடக்கும் போதும்
அக்கினியில் நடக்கும் போதும்
தகப்பனைப் போலவே சுமந்து வந்தார்
தாயினும் மேலாய் அன்புகூர்ந்தார்
அன்புகூர்ந்தார்

அழியாததும் வாடாததும்
சுதந்திரத்தை வாக்களித்தார்
மகிமையின் நம்பிக்கை உனக்கு தந்தார்
மகிழ்வுடன் தேவனை
தினம் பாடிடு தினம் பாடிடு


Songs Description: Christian Song Lyrics, Aathumave Un, ஆத்துமாவே உன்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez, Aarathanai Aaruthal Geethangal, Aathumavae Un.


Please Pray For Our Nation For More.
I Will Pray