Nenjae Nee - நெஞ்சே நீ
நெஞ்சே நீ கலங்காதே
சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே
நான் என்ன செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே
வஞ்சர் பகை செய்தாலும்
வாரா வினை பெய்தாலும்
நெஞ்சே நீ கலங்காதே
1.வினைமேல் வினை வந்தாலும்
பெண்சாதிப் பிள்ளை
மித்துரு சத்ரு ஆனாலும்
மனையோடு கொள்ளை போனாலும்
வானம் இடிந்து வீழ்ந்தாலும்
நெஞ்சே நீ கலங்காதே
2.பட்டயம், பஞ்சம் வந்தாலும்
அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்
மட்டிலா வறுமைப் பட்டாலும்
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும்
நெஞ்சே நீ கலங்காதே
3.கள்ளன் என்று பிடித்தாலும்
விலங்கு போட்டு
காவலில் வைத்தடித்தாலும்
வெள்ளம் புரண்டு தலைமீதில்
அலை மோதினாலும்
நெஞ்சே நீ கலங்காதே
சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே
நான் என்ன செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே
Song Descripttion: Tamil Christian Song Lyrics, Nenjae Nee, நெஞ்சே நீ.
Keywords: Beryl Natasha, Namo - 2, Music Mindss, Nenjae Nee Kalangathae, Nenje Ne, Nenje Nee.