Ericho En Mun - எரிகோ என் முன்
எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
நீர் என்னோடு இருப்பதினால்
செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே
நீர் என்னுள்ளே இருப்பதினால் - 2
உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
உம்மைப் போற்றி
போற்றி துதிப்பேன் ராஜா நீரே - 2
என்னை நீர் மீட்டுக் கொண்டீர்
கிருபையால் சேர்த்துக் கொண்டீர்
பெலவானாய் மாற்றி விட்டீர்
புது வாழ்வு தந்து விட்டீர்
நீதியில் நாடத்துகின்றீர்
அன்பினால் தாங்குகின்றீர் - 2
- உம்மை போற்றி
பூரண தேவன் நீரே
மகிமையின் ராஜன் நீரே
அற்புத தேவன் நீரே
உண்மையின் ராஜன் நீரே
தவறின நேரங்களில்
தவறாமல் உதவினீரே (நான்) - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Ericho En Mun , எரிகோ என் முன்.
KeyWords: Vijay Aaron. Christian Song Lyrics, pls 5, Power Lines Vol - 5, Erigo En Mun, Ericho Yen Mun.