Yesu Endra Thiru Naamathirkku - இயேசு என்ற திரு நாமத்திற்கு



இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்

1. வானிலும் பூவிலும்
மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித்
துதித்திடும் நாமமது – இயேசு

2. வேதாளம் பாதாளம்
யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம்
இந்த நாமத்திலே – இயேசு

3. பாவத்திலே மாளும்
பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும்
நாமமது – இயேசு

4. உத்தம பக்தர்கள்
போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும்
நாமமது – இயேசு

5. சஞ்சலம் வருத்தம்
சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும்
நாமமது – இயேசு


Song Description: Tamil Christian Song Lyrics, Yesu Endra Thiru Naamathirkku, இயேசு என்ற திரு நாமத்திற்கு.
Keywords:  Christian Song Lyrics, Cathrine Ebenesar, Yesu Entra Thiru Namathirkku, Yesu Endra Thiru Namathirkku, Yesu Entra Thiru Naamathirkku.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.