Siluvai Naathar Yesuvin - சிலுவை நாதர் இயேசுவின்
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள்
செய்திட்டால்
தம் கையின் காயங்கள்
பார்க்கின்றாரே
தீய வழியில் என்
கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள்
பார்க்கின்றாரே – சிலுவை நாதர்
2. தீட்டுள்ள எண்ணம்
என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை
நோக்குகின்றார்
வீண்பெருமை
என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட
ஏங்குகின்றார் – சிலுவை நாதர்
3. அவர் இரத்தம்
என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை
மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக
ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை
சேர்ப்பேன் – சிலுவை நாதர்
4. திருந்திடா பாவிக்காய்
அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய்
கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில்
விழுந்திட
கண்ணீரும் இரத்தமும்
சிந்துகின்றார் – சிலுவை நாதர்
Song Description: Tamil Christian Song Lyrics, Siluvai Naathar Yesuvin, சிலுவை நாதர் இயேசுவின்.
Keywords: Christian Song Lyrics, Jesus Redeems, Siluvai Nadhar Yesuvin, Siluvai Naadhar Yesuvin, Communion Song Lyrics, Good Friday Song Lyrics.
Siluvai Naathar Yesuvin - சிலுவை நாதர் இயேசுவின்
Reviewed by
on
October 16, 2018
Rating:

No comments:
Post a comment