Yetra Velayil - ஏற்ற வேளையில்





 

ஏற்ற வேளையில் எனக்கு உதவி செய்வீரே 
எப்பொழுதும் மறவாமல் பார்த்துக் கொள்வீரே
நீர் நன்மை செய்ய ஒருபோதும் தயங்குவதில்லை
தீமை செய்ய ஒரு போதும் நினைப்பதில்லையே

நன்றி இயேசையா நீர் நன்மை செய்பவர்
நன்றி இயேசையா என்னை பாதுகாப்பவர்
நன்றி இயேசையா என்னை கரம்பிடிப்பவர் 
நன்றி இயேசையா என்னை அரவணைப்பவர்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா - உமக்கு

1. வாக்குத்தந்த தேவன் என்றும் உண்மையுள்ளவர்
அவர் வார்த்தை ஒன்றும் ஒருபோதும் மாறாதையா 
அது நீரூற்றைப் போல ஓடிக்கொண்டிருக்கும
யாரும் தடுக்க முடியாதையாயா

2. தகுதியில்லா என்னையும் நீர் கண்டு கொண்டீரே
தரமான ஊழியத்தில் அழைத்துக் கொண்டிரே
நேர்வழியில் என்னை தினம் நடத்தி செல்பவரே 
பிரயாணத்தை வாய்க்கச் செய்த நல்லக் கர்த்தரே- என்

3. உம் பாதையில் நடந்து செல்ல பெலன் தந்தீரே 
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே 
அபிஷேகம் தந்து என்னை ஆசீர்வதித்தீரே
மகிமைப்படுத்தி சாட்சியாய் வாழச் செய்வீரே

 

Tanglish

[keywords] Yetra Velayil - ஏற்ற வேளையில், Divya, Arun, Aetra Velayil, Yetra Velaiyil, Tamil Christian Song.