இயேசு இல்லையினா நான் வீணா போயிருப்பேன்
அவர் அன்பு இல்லையினா நான் மண்ணா போயிருப்பேன்
மகளே மகள் என்று என்னை அழைத்தீரே
அருகில் வந்து என்னை அணைத்துக் கொண்டீரே
குப்பையில் கிடந்த என்னை தூக்கியெடுத்தீரே
உமது சேவைக்காய் என்னை தெரிந்து கொண்டீரே
உதவாத என்னையும் நீர் உருவாக்கினீரே
ஒரு போதும் மறவாத பாசம் வைத்தீரே
உமது பிள்ளையாய் என்னை ஏற்றுக் கொண்டிரே
ஒரு நாளும் மாறாத பாசம் வைத்தீரே
தாயும் தகப்பனுமாய் என்னோடு இருந்தீர்
என் வாழ்வில் துக்கம் எல்லாம் மறைய வைத்தீரே
இயேசுவே நீர் போதும் எப்போதுமே
உமக்காய் நான் வாழ்வேன் எந்நாளுமே
Tanglish
[keywords] Yesu Illaina - இயேசு இல்லையினா, Emima, Princy Chakra, Yesu Illaina Na, Yesu Illaina, Tamil Christian Song.