Nandrigal Sonnal Podhadhaiya - நன்றிகள் சொன்னால் போதாதையா





 

1. நன்றிகள் சொன்னால் போதாதையா
செல்வங்கள் தந்தாலும் போதாதையா
கவிதைகள் அழகும் போதாதையா  
ராகங்கள் இனிமையும் போதாதையா
 
காலங்கள் முழுதும் போதாதையா   
வண்ணங்கள் அழகும் போதாதையா
வானங்கள் அழகும் போதாதையா
உள்ளத்தின் எண்ணங்கள் போதாதையா

இயேசைய்யா உம் அன்பை நான் பாட 
போதாதே யுகம் யுகம் போதாதே
 
 2. நன்மைகள் பெற்றதால் உம்மை பாடுவேன் 
கிருபைகள் தொடர்ந்ததால் உம்மை போற்றுவேன் 
தயவுகள் கிடைத்ததால் உம்மை பாடுவேன் 
அதிசயம் நிகழ்ந்ததால் உம்மை பாடுவேன்
 
 வசனத்தால் உயிர் பெற்றேன் உம்மை பாடுவேன்
ஆவியில் பலன் பெற்றேன் உம்மை புகழுவேன்
வருடங்கள் சேர்த்தீரே உம்மை போற்றுவேன் 
தினம் தினம் நான் எந்நாளும் உம்மை பாடுவேன் 
 
3. உயிருள்ளவரையில் நான் உம்மை பாடுவேன்
உயிருள்ளவரையே நான் தினம் பாடுவேன்
மொழி உள்ளவரையில் நான் உம்மை பாடுவேன் 
இசை உள்ளவரையில் நான் உம்மை பாடுவேன் 
 
இருகரம் சேர்த்து நான் உம்மை தொழுவேன்
சிரத்தை தாழ்த்தி நான் உம்மை வணங்குவேன்
முழங்கால் முடங்க நான் உம்மை நம்புவேன்
தினம் தினம் நான் எந்நாளும் உம்மை போற்றுவேன்
 

Tanglish

[keywords] Nandrigal Sonnal Podhadhaiya - நன்றிகள் சொன்னால் போதாதையா, Johnkish, Praiselin Stephen, Naomi, Manuel, Nantrigal Sonnaal, Nandrigal Sonnaal Podhadhaiya, Tamil Christian Song.