உம்மை போல யாருண்டு
யாரும் இல்லையே
நீர் இருக்க பயம் இல்லையே - 2
கன்மலையும் நீரே
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே
1.முட்களால் என்றும் சூழும் வேளையில்
உறவினர் தூரம் தள்ளி போகையில் - 2
கைவிடாமல் நடத்தினீர் இரு கைகளால் என்னை தாங்கினீர்
உம் கிருபை என்னை சூழ்ந்ததே
தீங்கு என்றும் அணுகாதே
2.வனாந்திரமான பாதையில் நின்றாலும்
வழி இன்றி காரிருள் என்னை சூழ்ந்தாலும்
கண்மணி போல என்னை காத்திட்டீர்
உயரத்தில் என்னை நிறுத்தினீர்
உம் கிருபை என்னை சூழ்ந்ததே
தீங்கு என்றும் அணுகாதே
போற்றி பாடுவேன் பாடி துதிப்பேன்
உம் நாமம் உயர்த்தி ஆராதிப்பேன்
Tanglish
[keywords] Ummai Pol Yar - உம்மை போல யார், Jefrey Paul, Arpana Sharon, Ummai Pola Yaarundu, Ummai Pola Yarundu, Ummai Pola Yaruntu, Worship Song, Tamil Christian Song.
