ஆராதிக்க ஆராதிக்க அனலும் இரங்குது
ஸ்தோத்தரிக்க ஸ்தோத்தரிக்க கிருபை பெருகுது - 2
நன்றி சொல்ல நன்றி சொல்ல நன்மை பெருகுது - 2
நாளெல்லாம் உம்மை துதிக்க உள்ளம் ஏங்குது -2
உயிரே என் இயேசுவே
நாளெல்லாம் நீர்தான் தஞ்சமே - 2
கடைசி வரை கரை சேர்க்கும்
கல்வாரி நாயகனே - 2
வானத்தையும் பூமியையும்
உந்தன் வல்லமையால்
அழகாய் சிருஷ்டித்தீரே - 2
மாறாத மாணிக்கமே
பகல் எல்லாம் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே - 2
கிருபையும் இரக்கமும் ஈவாக தந்தீரே
என்றென்றும் வாழ வைப்பவரே - 2
தூங்கா கண்கள் உடையவர் நீர்தானே
என்றென்றும் பாதுகாப்பவரே - 2
உந்தன் வருகைக்கு எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறேன் எப்போது வருவீரையா - 2
ஆத்துமாவும் வாஞ்சிக்குதே உள்ளமும் ஏங்கிடுதே
உம் முகத்தை நானும் பார்க்கனுமே - 2
Tanglish
[keywords] Aaraathikka Aaraathikka - ஆராதிக்க ஆராதிக்க, David Durai, Leo Rakesh, Araathika Araathika, Arathika Arathika, Tamil Christian Song.
