இயேசு கைவிடமாட்டார்
நான் வணங்கிடும் என் தேவன் என்னோடு
இருக்க பயம் எனக்கு இல்லையே
நான் நம்பிடும் என் தேவன் என்னோடு
இருக்க கலக்கம் எனக்கு இல்லையே
கைவிடமாட்டார் இயேசு கைவிடமாட்டார்
காலம் எல்லாம் என்னை காத்துக் கொள்வார்
1.நான் நினைத்ததோ ஒன்று நடப்பதோ வேறு
எதிர்பார்த்த காரியம் தாமதமானதோ
விசுவாசம் குறையாது
அழைத்தவர் என்னை நடத்துவார்
2.உதவுவேன் என்று சொன்னார்கள்
சமயம் வாய்த்தபோது தன் கையை விரித்தார்கள்
கை கொடுத்து என்னை தூக்கினார்
காலம் எல்லாம் வழி நடத்துவார்
3.அனைத்தையும் இழந்த போதும்
உம்மை இழக்கவில்லை
உம்மீது கொண்ட காதல் சற்றும் குறையவில்லை
இழந்ததை திரும்ப தந்தார்
மகிழ்ச்சியால் என்னை நிரப்பினார்
Tanglish
[keywords] Yesu Kaividamaattaar - இயேசு கைவிடமாட்டார், Joshuva Santiago, Aaron Bala, Naan Nambidum, Naan Nambeedum, Tamil Christian Song.
