Aruvadaiku Yejamanane - அறுவடைக்கு எஜமானனே




 

அறுவடைக்கு எஜமானனே
பின்மாரியை அனுப்பிடுமே
முன்மாரி பெய்யச்செய்தீர்
பெந்தெகொஸ்தே நாளிலே
பின்மாரி ஆவியை
எங்கள் மீது ஊற்றுமே

எரிகோ மதில்போல் எழும்பி நிற்கும்
ஊழிய தடைகள் உடையனுமே
யோசுவா போல பெலப்படுத்தி
தேசத்தை மீட்டிட செய்திடுமே

ஊற்றிடுமே உம் ஆவியை
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த தேசம் சந்திக்கப்பட
உந்தன் நாமம் மகிமைப்பட
உம் இராஜ்ஜியம் கட்டப்பட

2.யேசபேல் போல பயமுறுத்தும்
இருளின் அதிகாரம் தகர்ந்திடவே
எலியாவைப்போல வைராக்கியமாய்
இயேசுவின் நாமத்தை உயர்த்தனுமே

ஊற்றிடுமே உம் ஆவியை
ஊற்றிடுமே உம் அக்கினியை
உந்தன் வல்லமை வெளிப்படுத்தும்
உண்மை தேவனை நிலைநிறுத்தும்

3.உலர்ந்த எலும்பின் நிலையினின்று
வாலிபர் உமக்காய் எழும்பனுமே
எசேக்கியேல் போல ஆவியைப்பெற்று
உந்தன் வார்த்தையை உரைக்கனுமே

ஊற்றிடுமே உம் ஆவியை
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த தேசம் பிரமிக்கத்தக்க
யுத்தசேனை எழும்பி நிற்க

 

Aruvadaikku Ejamanane
Pinmaariyai Anupidume
Munmaari Peiyaseidheer
Pendhekosthe Naalile
Pinmaari Aaviyai
Engal Meedhu Ootrume

1. Yerigo Madhilpol Ezhumbi Nirkum
Oozhiya Thadaigal Udayanume
Yosuva Pola Belapaduthi
Dhesathai Meetida Seidhidume

Ootridume Um Aaviyai
Ootridume Um Akkiniyai
Indha Dhesam Sandhikkapada
Undhan Naamam Magimaipada
Um Raajjiyam Kattapada

2. Yaesabel Pola Bayamuruthum
Irulin Adhigaram Thagarndhidave
Eliyavai Pola Vairakiyamai
Yesuvin Naamathai Uyarthanume

Ootridume Um Aaviyai
Ootridume Um Akkiniyai
Undhan Vallamai Velipaduthum
Unmai Dhevanai Nilainiruthum

3. Ularndha Elumbin Nilaiyinindru
Vaalibar Umakkai Ezhumbanume
Ezekiel Pola Aaviyai Petru
Undhan Vaarthayai Uraikkanume

Ootridume Um Aaviyai
Ootridume Um Akkiniyai
Indha Dhesam Bramikkathakka
Yuththa Senai Ezhumbi Nirkka

[keywords] Aruvadaiku Yejamanane - அறுவடைக்கு எஜமானனே, Rees Robinson, Vethanayagam Stanley, Aruvadaiku Yejamananae, Tamil Christian Song.