என்னை மீட்டிட தன்னை தந்தீரே
என்னை காத்திட துணையாய் நின்றீரே
இயேசுவே என் கரத்தை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
இயேசுவே உம் கரத்தை நம்பி என்றும் வாழ்ந்திடுவேன்
கடன் என்ற கடலில் சிக்கி மூழ்க நான் சென்றவன்
கரை சேர முடியாதென்று கவலை நான் கொண்டவன்
ஆனாலும் உந்தன் கரமோ கைவிடவில்லை ஐயா
கரம் பிடித்து கரையை சேர்ந்த கர்த்தரே நன்றி ஐயா
இரவும் பகலும் பாவம் செய்து
ஆவி கனியை இழந்தவன்
ஆதியின் அன்பை விட்டேன் என்று சொல்லி அழுதவன்
ஆனாலும் உந்தன் பாசம் குறையவே இல்லை ஐயா
என் மீது நேசம் வைத்த நேசரே நன்றி ஐயா
Tanglish
[keywords] Thannai Thandhirae - தன்னை தந்தீரே, JM Martin, John Paul, Ennai Meetida, Ennai Meeteeda, Tamil Christian Song.
