Uyaramana Sthalangalile - உயரமான ஸ்தலங்களிலே

Uyaramana Sthalangalile - உயரமான ஸ்தலங்களிலே



உயரமான ஸ்தலங்களிலே என்னை
என் தேவன் நடக்கப்பண்ணுவார்
அவரைப் போற்றிப் பாடுவேன்
நான் துதித்துப்பாடுவேன்
என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன்

1. பூமி நிலைமாறிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்

2. அத்திமரம் திராட்சைசெடிகள்
பலனற்று அழிந்து போனாலும்
என் தேவனாம் கர்த்தருக்குள்ளே
ஆனந்த சந்தோஷம் காண்பேன்

3. சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் பலுகிப்பெருகுவான்
என் கர்த்தர் சொன்ன
வார்த்தைகளெல்லாம்
ஏற்ற காலம் நிறைவேறுமே

4. எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன்
என்னை தினம் பெலப்படுத்தும்
என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன்


Songs Description: Uyaramana Sthalangalile, உயரமான ஸ்தலங்களிலே.
KeyWords: Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal, ஆராதனை ஆறுதல் கீதங்கள், Uyaramaana.

Please Pray For Our Nation For More.
I Will Pray