என்னை கைவிடாமல் நடத்தினீர்
நான் எப்படி நன்றி சொல்வேன்
உந்தன் அன்பை என்னை
விட்டென்றும் எடுத்திடாமல்
அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர்
1 பாதை மாறி சென்ற போதும்
நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்
என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்
எப்படி உமக்கு நன்றி சொல்வேன்
2 வழி தெரியாமல் திகைத்த போது
உம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்
என்னை மறவாமல் நடத்தி வந்தீர்
எப்படி உமக்கு நன்றி சொல்வேன்ழ
3 உலகம் பின்னால் சென்ற போது
உம் அன்பினால் நீர் இழுத்துக்கொண்டீர்
என்னை சேர்க்க வரப்போகிறீர்
எப்படி உமக்கு நன்றி சொல்வேன்