Nadanthathellam Nanmaikae - நடந்ததெல்லாம் நன்மைக்கே



நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடப்பதெல்லாம் நன்மையே
என்றும் நம்புவோம் இயேசுவையே
நம்மை நடத்துவார் என்றுமே

உலக பாடுகள் நிந்தை இழப்புகள் 
அன்பைவிட்டு பிரிக்குமோ
உலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் 
நித்தியத்திற்கு ஈடாகுமோ

போதுமே அவர் அன்பொன்றே 
நம் நோக்கம் நித்தியமே
ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயா
இயேசு போதுமே

வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம்
காரியம் வாய்க்கச் செய்வார்
இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்
செயல்களை வாய்க்கச் செய்வார்

நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் 
என்றும் மேன்மைப் படுத்துவார்
ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயா
நம்மை நடத்துவார்

மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம்
ஆவியால் நிரம்பிடுவோம்
ஆவியானவர் நமக்குள் இருப்பதை 
உலகிற்குக் காட்டிடுவோம்

அவர் அழைப்பொன்றே என்றும் மாறாதே
அபிஷேகத்தைக் காத்துக் கொள்வோம்
ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயா
இயேசுவை நோக்குவோம்


Song Description: Tamil Christian Song Lyrics, Nadanthathellam Nanmaikae, நடந்ததெல்லாம் நன்மைக்கே.
KeyWords: Praison Stanley Timothy, Wesly Maxwell, Nadanthathellam Nanmaikke.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.