Isravelin Aasirvatham - இஸ்ரவேலின் ஆசிர்வாதம்



இஸ்ரவேலை ஆசீர்வதிக்க
தேவனுக்கு பிரியம்
இடம் கொள்ளாமல் போகுமட்டும்
ஆசீர்வதிப்பாரே - 2
வானத்தின் பலகணி திறந்தே
நன்மையால் நிரப்புவார்
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே - 2

1. ஆபிரகாமின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே
ஈசாக்கின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே - 2
காலதாமதம் ஆனாலும் நாங்கள்
முற்றிலும் சுதந்தரிப்போம்
பஞ்ச காலம் வந்தாலும்
நூறு மடங்காய் பெற்றிடுவோம் - 2
ஆசீர்வாத மழையில் நனைந்திடுவோம்
ஆரோக்ய வாழ்வை பெற்றிடுவோம் - 2
                                     - வானத்தின்

2. யோசேப்பின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே
தானியேலின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே - 2
ஏற்றக்காலத்தில் உயர்த்திடுவார்
எம்மை தலைவர்களாக்கிடுவார்
மறைபொருள்கள் யாவையும்
தரிசனமாய் தந்திடுவார் - 2
எதிராளிகள் தாழ்த்தி உயர்த்திடுவார்
நிலைவரமான ஆவியை தந்திடுவார் - 2
                                     - வானத்தின்


Songs Description: Isravelin Aasirvathamஇஸ்ரவேலின் ஆசிர்வாதம்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Celin Joel, Joel Thomasraj, Isravelin Aasirvaatham.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.