Maha Maha Periyathu - மகா மகா பெரியது






மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை - 2

தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை
                  - மகா மகா

1. மிகக் கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் - 2
கொள்ளைநோய் விலகணும்
ஜனங்கள் வாழணும்
உம் நாமம் உயரணுமே - 4

உம் இரக்கம் உம் தயவு
அளவிட முடியாதைய்யா - 2
                 - தேற்றிடும் கிருபை

2. பெலவீனங்களைக் குறித்து
பரிதவிக்கும் மிகப்பெரிய 
பிரதான ஆசாரியரே - 2
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்திருக்கிறேன் - 4

உம் இரக்கம் உம் தயவு
அளவிட முடியாதைய்யா - 2
                 - தேற்றிடும் கிருபை

3. கிழக்கு மேற்கு உள்ள தூரம் 
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே - 2
பூலோகம் பரலோகம் 
எவ்வளவு உயர்ந்ததோ 
அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4

உம் இரக்கம் உம் தயவு
அளவிட முடியாதைய்யா - 2
                 - தேற்றிடும் கிருபை

4. திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே - 2
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே - 4

உம் இரக்கம் உம் தயவு
அளவிட முடியாதைய்யா - 2
                 - தேற்றிடும் கிருபை


Song Description: Tamil Christian Song Lyrics, Maha Maha Periyathu, மகா மகா பெரியது.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans, Maga Maga Periyathu.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.