Unna Nenachen - உன்ன நினச்சேன்
என் மூச்சு காத்தான
என் உருவமா உருவான
உன்ன அள்ளி
நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன்
நொடி கூட மறக்காம
உன்ன விட்டு பிரியாம
நிழலா நெருங்கி
நடக்கிறேன், சுமக்கிறேன்
உன் கை விரல் புடிச்சி கூட வருவேன்
காவலானாய் நான் நிற்பேன்
உன் நினைப்பில்
என் இதயம் துடிக்கும்
உன்ன உன்ன உன்ன
நினச்சேன் நினச்சேன்
என்ன என்ன என்ன
கொடுத்தேன் கொடுத்தேன்
1. ஆகாயம் போல நேசம்
உன் மேல் போத்தி வச்சேன்
ஆசை எல்லாமே நீ தான்
உன்ன அலங்கரிச்சேன்
பாரமாய் இருந்த எல்லாம்
நானே சுமந்துக்கிட்டேன்
தூரமா இருந்த உன்ன
நானே கூட்டிகிட்டேன்
கறை எல்லாமே துடச்சேன்
இனி குறையே உனக்குள்ள இல்ல
காட்டு மரமே உன்ன
ஒட்டி வச்சேன் எனக்குள்ள
உன்ன உன்ன உன்ன
நினச்சேன் நினச்சேன்
என்ன என்ன என்ன
கொடுத்தேன் கொடுத்தேன்
Song Description: Tamil Christian Song Lyrics, Unna Nenachen, உன்ன நினச்சேன்.
KeyWords: Isaac Dharmakumar, Isaac.D, En Moochu Kathaana.